இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு : அகதிகளின் பிரச்சனையை உலகறியச் செய்த பிரபல எழுத்தாளர் தேர்வு
Author: Babu Lakshmanan7 October 2021, 5:33 pm
2021ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு தன்சானியா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதி உள்ளிட்ட துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2021ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் 4ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மருத்துவம், இயற்பியல், வேதியியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு விட்டன.
இந்த நிலையில், இலக்கியத்திற்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தன்சானியா நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் பரிசு தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.
அகதிகள் பிரச்சனை, காலனி ஆதிக்கம் மற்றும் வளைகுடா நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்து செல்லும் மக்களின் வாழ்வியல் பற்றி நாவல்கள் எழுதியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.
0
0