கடும் உழைப்பாளியை கவுரவித்த கம்பெனி! நிலாவில் இடம் வாங்கி தந்திருக்காங்க!

3 April 2021, 10:00 am
Quick Share

தனது நிறுவனத்தில் கடுமையாக உழைத்த தொழிலாளி ஒருவருக்கு, நிலவில் இடம் வாங்கி கொடுத்து கவுரவித்திருக்கிறது நொய்டாவை சேர்ந்த கம்பெனி ஒன்று.

நாம் அனைவரும் நாம் வேலை செய்யும் இடத்தில் மிகவும் கடினமாக உழைக்கிறோம். பல நேரங்களில், நமது கடின உழைப்பு கவனிக்கப்படாமல் போகிறது. ஆனால் உழைப்புக்கு வெகுமதி கிடைக்கும் நிகழ்வுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கிறது. அதனால் நம் வேலை இன்னும் மெருகேறும் என்பது தான் உண்மை. இங்கு ஒருவரை பாருங்கள்.. நொய்டாவை சேர்ந்த இஃப்தேகர் ரஹ்மானி என்பவருக்கு, நிலாவில் இடம் வாங்கி கொடுத்திருக்கிறது அவர் வேலை பார்க்கும் கம்பெனி.

நொய்டாவில் இயங்கி வருகிறது ஏ.ஆர் ஸ்டுடியோஸ் என்ற மென்பொருள் மேம்பாட்டு நிறுவனம். இது ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் (செயற்கை நுண்ணறிவு) துறையிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கு இஃப்தேகர் ரஹ்மானி என்பவர் வேலை பார்க்கிறார். பீகாரின் தர்பங்கா மாவட்டத்திலுள்ள பெனிபூரிலிருந்து வந்தவர் ரஹ்மானி. பிடெக் முடித்திருக்கும் இவர், இன்ஜினியர் ஆக வேண்டும் என்பது பெரிய கனவு. தனது கனவை நிறைவேற்ற கடுமையாக உழைத்த இவருக்கு உண்டான அங்கீகாரத்ததை அளித்திருக்கிறது அவரது கம்பெனி.

ரஹ்மானிக்கு நிலாவில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி கொடுத்து கவுரவித்திருக்கிறது அவரது நிறுவனம். இதனை அறிந்து மகிழ்ச்சி அடைந்த அவரது குடும்பம், அருகில் வசிப்பவர்களுக்கு இனிப்பு வழங்கி பரவசமடைந்தனர். தனது மகன் குறித்து நஸ்ரா பேகம் கூறுகையில், அவர் மேலும் பல உயரங்களை அடைவார் என்றார்.

நிலவில் இடம் பரிசளிப்பது அண்மை காலங்களில் அதிகம் நடந்து வருகிறது. சமீபத்தில், சூரத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர், பிறந்த தனது மகனுக்காக நிலவில் நிலம் வாங்கினார்.

Views: - 0

0

0