கொரோனா ஊரடங்கை அதிரடியாக நீக்கிய வடகொரியா..! ஆனா ஒரு டுவிஸ்ட்…!

15 August 2020, 1:32 pm
North_Korea_UpdateNews360
Quick Share

பியோங்யாங்: கொரோனா ஊரடங்கை வடகொரியா அதிரடியாக நீக்கி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

சீன நாட்டில் உகான் நகரில் தோன்றி 200 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி இருக்கிறது. அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன.

ஆனால் எப்போதும் மர்ம தேசமாக வர்ணிக்கப்படும் வட கொரியாவில் கொரோனா நுழையவில்லை என்று பரவலாக கூறப்பட்டது. ஆனால் அதையும் முறியடித்து, கொரோனா வட கொரியாவில் நுழைந்தது.

தென்கொரியாவில் இருந்து வடகொரிய எல்லையான கேசாங் நகரத்துக்கு சட்ட விரோதமாக வந்த ஒருவரால் கொரோனா கால் பதித்தது. இதையடுத்து அதிபர் கிம் உடனடியாக அவசர நிலையை அறிவித்தார்.

உடனே தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. கேசாங் எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன. முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.  ஆயிரக்கணக்கான மக்கள் தனிமையில் வைக்கப்பட்டனர்.

நிலைமைகள் இப்படி அதிரடியாக இருக்க, திடீரென கொரோனா ஊரடங்கை நீக்கி கிம் அறிவித்துள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. ஆனால் எல்லைகள் மூடப்பட்டு தான் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

Views: - 40

0

0