கொரோனா தடுப்பூசி தேவையில்லை:தடுப்பூசி வாங்குவதற்கு வட கொரியா மறுப்பு

Author: Udhayakumar Raman
4 September 2021, 10:19 pm
Quick Share

வட கொரிய நாட்டிற்கு ஐக்கிய நாடுகள் சபையின் திட்டம் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை வாங்க மறுத்த அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன், கொரோனா தொற்றை தாங்கள் பார்த்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

உலகின் பல நாடுகளிலும் இன்னும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் முழுமையாக நீங்கியபாடில்லை. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இப்படி பல்வேறு நாடுகள் கொரோனா தொற்றுப் பரவலை சமாளிக்க நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் திட்டம் மூலம் வட கொரியாவுக்கு கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தத் தடுப்பூசிகளை வாங்க வேண்டாம் என்று, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டுள்ளார். மேலும், ‘ இத்தகைய கொரோனா பெருந்தொற்றை சமாளிக்க நம் ஸ்டைலில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொற்றுப் பரவலை சமாளிக்க போடப்படும் கட்டுப்பாடுகள் ஒரு கணம் கூட மீறப்படக் கூடாது’ என்று அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்து உள்ளதாக அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பு மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Views: - 378

0

0