‘பிரதமர் ஆக இருந்தாலும் தப்பு தான்’: விதிமுறை மீறலுக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்….நார்வே காவல்துறை அதிரடி..!!

9 April 2021, 7:08 pm
narvey pm - updatenews360
Quick Share

நார்வே: நார்வே நாட்டுப் பிரதமர் எர்னா சொல்பேர்க் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதால் அவருக்கு அபராதம் விதித்து அந்நாட்டு காவல்துறை அதிரடி காட்டியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நார்வே நாட்டில் கொரோனா பரவல் காரணமாக கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது. நாட்டில் 10 பேருக்கு மேல் ஒன்றாக கூடக்கூடாது என்பது கொரோனா விதிமுறைகளில் ஒன்றாகும். இந்நிலையில் பிரதமராக உள்ள எர்னா சொல்பேர்க் தன்னுடைய அறுபதாவது பிறந்தநாளை குடும்பத்தாருடன் கொண்டாடினார்.

இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பத்து பேருக்கு பதில் 13 பேர் பங்கேற்றனர். இதன் காரணமாக கொரோனா பாதுகாப்பு விதிமுறையை மீறியதாக அந்நாட்டுக் காவல் துறை அவருக்கு 1,713 யூரோ அபராதம் விதித்துள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 1,52,200 அபராதமாக தன்னுடைய நாட்டுப் பிரதமருக்கு நார்வே காவல் துறை விதித்துள்ளது.

இந்த அபராத தொகையை செலுத்திய நார்வே பிரதமர் எர்னா சொல்பேர்க் கொரோனா விதிமுறை மீறியதற்காக மன்னிப்பும் தெரிவித்துள்ளார் என்பது கவனிப்படவேண்டிய விஷயமாகும். பிரதமராக இருந்தாலும் அபராதம் விதித்த காவல்துறைக்கு நெட்டிசன்கள் பாராட்டுகளை குவித்துள்ளனர்.

Views: - 148

0

0