இந்தியா மட்டுமல்ல இந்த நாடுகளுக்கும் சேர்த்து தான்… கண்டிஷன் போட்ட இஸ்ரேல்!!

Author: Udayachandran
31 July 2021, 2:08 pm
Israel- Updatenews360
Quick Share

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மேலும் 4 நாடுகளுக்கு செல்லத் தடை விதித்து இஸ்ரேல் அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் உலக நாடுகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. கடந்த வருடம் பரவிய தொற்றால் உலக நாடுகள் ஸ்தம்பித்தது. மெல்ல மெல்ல இயல்வு நிலைக்கு உலக நாடுகள் திரும்பி வந்தாலும், ஒரு சில நாடுகளில் தொற்று குறையாமலே உள்ளது.

இதனால் ஒவ்வொரு நாடும் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என தடை விதித்தும், சில கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது. இந்தநிலையில் இந்தியா, அர்ஜென்டினா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, மெக்சிகோ, ரஷ்யா, பெலாரஸ், உஸ்பெகிஸ்தான், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு செல்ல இஸ்ரேல் அரசு தடை விதித்துள்ளது.

இந்த நாடுகளை தவிர்த்து பிற நாடுகளுக்கு பயணம் செய்வதற்கு கடுமையான கட்டுப்பாடுகளையும், எச்சரிக்கையும் இஸ்ரேல் விடுத்துள்ளது. இதை தவிர, இங்கிலாந்து, ஜார்ஜியா, சைப்ரஸ் மற்றும் துருக்கி ஆகிய 4 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இஸ்ரேல் தடை விதித்துள்ளது.

Views: - 403

0

0