இத்தாலியில் தீவிரமடையும் கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்தது..!!

6 March 2021, 9:19 am
italy-coorna-updatenews360
Quick Share

ரோம்: இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் 3ம் இடத்திலும் உள்ளது. இந்நிலையில், இத்தாலி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 24 ஆயிரத்து 036 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 30 லட்சத்து 23 ஆயிரத்து 129 ஆக உள்ளது. ஒரே நாளில் 297 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 99 ஆயிரத்து 271 ஆக உள்ளது.

மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24.67 லட்சத்தை கடந்துள்ளது. சுமார் 4.56 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Views: - 4

0

0