ஓ மை காட்! உணவு டெலிவரி பாய்க்கு இவர் எப்படி வழி காட்டுறார் பாருங்க!!

27 February 2021, 9:29 am
Quick Share

உணவு டெலிவரி செய்யும் நபருக்கு தனது வீட்டை அடையாளம் காட்ட, வானில் சக்திமிகுந்த டார்ச் லைட் அடித்து, ஒருவர் வழிகாட்ட அந்த பதிவு, டுவிட்டரில் வைரலாகி உள்ளது.

கொலை பசியில் இருக்கும் போது, வீட்டில் உணவு சமைக்கவில்லை என்றால், ஆன்லைனில் ஆர்டர் பண்ணி வழிமேல் விழி வைத்து காத்திருப்பவர்கள் ஏராளம். நாம் கொடுத்த வீட்டின் அட்ரஸ், டெலிவரி பாய்க்கு தெரியவில்லை என்ற காரணத்தால், உணவு வர தாமதம் ஆனால், அவரது மனநிலையை சொல்லவே வேண்டாம். பெரும்பாலானோர், மொபைலில் டெலிவரி பாயை அழைத்து, தங்கள் இருப்பிடத்திற்கு வரவழைக்க, தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்காத குறையாக போராடுவர்.

ஆனால் இந்த ஸ்மார்ட் நபர், அதிக பவரான டார்ச் லைட் ஒன்றை, வானில் அடித்து, உபெர் ஈட்ஸ் டெலிவரி பாய்க்கு தனது இருப்பிடத்தை காட்டுகிறார். ரெஜினால்டு என்ற அந்த டெலிவரி பாய், அந்த லைட்டை பின்பற்றி அவரது வீட்டை அடையும்படி கூறியிருக்கிறார். ‘உபெர் ஈட்ஸ் என் வீட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை’ என தலைப்பிட்டு, அந்த ஸ்மார்ட் நபர் தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை பகிர, செம வைரலாகி உள்ளது.

அந்த புகைப்படத்துடன் டெலிவரி பாயுடன் நடந்த சாட்டிங் ஸ்கிரீன் ஷாட் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். அதில், ‘வானை பாருங்கள்.. ஒளியை பின்பற்றி வாருங்கள்’ என அவர் கூற, டெலிவரி பாய், ‘ஓ மை காட்.. நான் அதனை பார்க்கிறேன்’ என ரிப்ளே செய்திருக்கிறார். பிப்ரவரி 22ஆம் தேதி டுவிட்டரில் பகிரப்பட்ட இந்த டுவிட், 98,400 ரீடுவீட் மற்றும் 7,82,800 லைக்குகளை அள்ளி இருக்கிறது.

ஒருவர், ‘இந்த மனிதன் 2077 இல் வாழ்கிறான்’ என ஒருவர் பதிவிட்டிருக்கிறார். மற்றொருவர், ‘இதனை நான் அடுத்த முறை பின்பற்றுகிறேன்’ என பதிவிட்டிருக்கிறார். செம ஐடியா ஜி…

Views: - 5

0

0