பயணிகளின் பாதுகாப்பில் அச்சுறுத்தல் – லண்டனில் ‘ஓலா’வின் உரிமம் ரத்து

Author: Aarthi
5 October 2020, 12:13 pm
london ola2-updatenews360
Quick Share

பயணிகளின் பாதுகாப்பில் அச்சுறுத்தல் உள்ளதாக கூறி லண்டனில் ஓலாவின் இயக்க உரிமத்தை ரத்து செய்துள்ளது லண்டன் பொதுப்போக்குவரத்து ஆணையம்.

பெங்களூருவை சேர்ந்த ஓலா நிறுவனம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் லண்டன் டாக்ஸி சந்தையில் நுழைந்தது. பொது போக்குவரத்து சந்தையில் உள்ள உபெர் மற்றும் பாரம்பரிய கருப்பு வண்டி ஓட்டுநர்களும், தங்கள் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாக ஓலா உள்ளதாக இந்நிறுவனத்தை ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் லண்டனுக்கான போக்குவரத்து ஆணையம் தனது அறிக்கையில், ஓலா நிறுவனத்தின் பொது போக்குவரத்தில் அதிக எண்ணிக்கையிலான தோல்விகள் உள்ளது. ஓலா நிறுவனத்தின் செயலி சட்டதிட்டங்களுக்கு பொருந்தாத நிலையில் உள்ளது. மேலும் இது பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது.

போக்குவரத்து ஆணையத்தின் டி.எஃப்.எல் முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய ஓலா நிறுவனத்திற்கு 21 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது எனவும் லண்டன் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துளள்து.

Views: - 42

0

0