இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் குடியரசு தினத்தில் இப்படி ஒரு ஒற்றுமையா..? வாழ்த்துக் கூறிய ஸ்காட் மோரிசன்..!

26 January 2021, 4:07 pm
Scot_Morrison_UpdateNews360 (2)
Quick Share

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் குடியரசு தினத்தன்று இந்தியாவுக்கும், இந்தியப் பிரதமர் மோடிக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். மேலும் இரு நாடுகளும் தேசிய தினத்தைப் பகிர்ந்து கொள்வது ஒரு அற்புதமான தற்செயல் நிகழ்வு என்று குறிப்பிட்டார். 

ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் உறுதியான நெருங்கிய நட்பு நாடுகள் என்ற பிரதமர் மோடியின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய ஸ்காட் மோரிசன், இரு நாடுகளும் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி போன்ற ஒத்த கொள்கைகளில் செயல்பட்டதாகக் குறிப்பிட்டார். 

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், பிரதமர் மோடியுடனான நட்பில் 2019’ஆம் ஆண்டில் ஒரு முக்கியமான தருணத்தை நினைவுபடுத்தினார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட விரிவான மூலோபாய கூட்டாண்மை மூலம் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், தொற்றுநோயால் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டதாக ஸ்காட் மோரிசன் குறிப்பிட்டார். ஆனால் இந்திய மாணவர்களையும் தொழில் வல்லுனர்களையும் மீண்டும் தங்கள் நாட்டிற்கு வரவேற்க ஆஸ்திரேலியா தயாராக இருப்பதாக பிரதமர் மோடிக்கு அவர் தற்போது உறுதியளித்தார். 

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் இறுதியாக, ஜனவரி 26 அன்று ஆஸ்திரேலியாவும் தனது தேசிய தினத்தை கொண்டாடுவதாகவும், இந்தியாவுடன் அதே நம்பிக்கையையும் பெருமையையும் பகிர்ந்து கொள்வதாகக் கூறினார். 

Views: - 0

0

0