ஹஜ் புனித பயணத்திற்கு வெளிநாட்டினருக்கு ‘நோ’…உள்நாட்டினருக்கு மட்டும் அனுமதி: சவுதி அரசு அறிவிப்பு..!!

12 June 2021, 6:15 pm
hajj - updatenews360
Quick Share

துபாய்: கொரோனா பெருந்தொற்று பரவலால் இந்த ஆண்டு உள்நாட்டினர் 60,000 பேர் மட்டுமே ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர் என சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

சவுதி அரேபியாவின் அரசு ஊடகத்தில் இன்று வெளியாகியுள்ள செய்திக் குறிப்பில், ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதிக்கப்படுவோரில் மூன்றில் இரண்டு பங்கினர் சுமார் 160 நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பது வழக்கம்.

hajj_updatenews360


இந்த ஆண்டு ஹஜ் புனித பயணம் ஜூலை மாதம் மத்தியில் தொடங்கவிருக்கிறது. தற்போது கோவிட் பெருந்தொற்று பரவலால் இந்த ஆண்டு உள்நாட்டினர் 60,000 பேர் மட்டுமே ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். இந்த முடிவை ஹஜ் அமைச்சகமும், உம்ராவும் இணைந்து எடுத்துள்ளன.

கடந்த ஆண்டே, வெளிநாட்டிலிருந்து சவுதி அரேபியா சென்று வசித்து வந்த சில ஆயிரம் பேர் இந்த ஆண்டின் ஹஜ் புனித பயணத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 268

0

0