ஒற்றை கால் இல்லாமல் அவதியுற்ற கோலா கரடி! புது வாழ்வு பெற்றதால் மகிழ்ச்சி!!

28 February 2021, 8:28 am
Quick Share

கால் ஒன்று இல்லாமல் அவதியுற்ற கோலா கரடிக்காக, ஆஸ்திரேலிய பல் டாக்டர் ஒருவர், செல்கை கால் கண்டுபிடித்து அசத்தியிருக்கிறார். செயற்கை கால் பொருத்தபட்ட பின், ஓடி ஆடி விளையாடும் கோலாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

உலகில் அழிந்துவரும் அரியவகை உயிரினங்களுள் கோலா கரடியும் ஒன்று. அதன் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு வருவதால், அதன் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டு வருகிறது. ஆஸ்திரேலியாவில் அடிக்கடி ஏற்படும் காட்டுத்தீயாலும், அதன் இனம் அழிந்து கொண்டு வருகிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில், ஒற்றை காலை இழந்த கோலா ஒன்று, கடந்த 2017 ஆம் ஆண்டு மீட்கப்பட்டிருக்கிறது. அதன் தாய் இறந்த நிலையில், அருகில் சோகமாக அமர்ந்திருந்த அந்த கோலா மீட்கப்பட்ட நிலையில், கால் ஒன்றை இழந்திருந்த அதற்கு தற்போது மறுவாழ்வு கிடைத்திருக்கிறது. காலை இழந்ததால், 3 கால்களுடன் அவதியடைந்த கோலாவுக்காக, செயற்கை கால் பொருத்த, பல்வேறு முயற்சிகள் நடந்தது.

அமெரிக்க நிறுவனம் தயாரித்த பாதம், பல்வேறு முயற்சிகளுக்கு பின் தோல்வியில் முடிய, ஆஸ்திரேலிய பல் டாக்டர் ஒருவர் இதனை சாத்தியமாக்கி சாதனை படைத்திருக்கிறார். இளஞ்சிவப்பு நிறத்தில் பொறுத்தப்பட்ட அதன் பாதங்களில் இருக்கும் ‘கிரிப்’ உதவியுடன், மரத்தில் அதனால் ஏற முடிகிறது. இதனால் மகிழ்ச்சியான அந்த கோலா, மரங்களில் ஏறி, ஆடி ஓடி விளையாடி வருகிறது. கோலா ஹேப்பி அண்ணாச்சி!!

Views: - 12

0

0