ஆப்கானிஸ்தான் தலிபான்களுக்கு புது சிக்கல்: காபுலுக்குள் நுழைந்த மற்ற பயங்கரவாத குழுக்கள்..!!

Author: Aarthi Sivakumar
17 August 2021, 5:33 pm
Quick Share

காபூல்: ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கு ஊடுருவியுள்ள மற்ற பயங்கரவாத அமைப்புகளால் தலிபான்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களுக்குள் தலிபான்கள் போல் வெள்ளைக் கொடியுடன் இஸ்லாமிக் ஸ்டேட் (ஐ.எஸ்.,), ஜெய்ஷ்-இ-முகமது (ஜே.எம்.,) மற்றும் லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட மற்ற பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடந்த சில நாட்களில் நுழைந்துள்ளனர். இவர்கள் தலிபான் தலைமையின் உத்தரவை மீறி தாங்களாகவே செயல்பட்டு வருகின்றனர்.

ஆப்கனை கைப்பற்றியுள்ள தலிபான்களுக்கு இது காபூலின் பாதுகாப்பை உறுதி செய்வதில் பெரும் சவாலாக மாறக்கூடும். இதனால் இந்த பயங்கரவாத குழுக்களுக்கும் தலிபான்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்படவும் வன்முறைகள் வெடிக்கவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், மற்ற பயங்கரவாதக் குழுக்களை காபூலை விட்டு வெளியேறுமாறு தலிபான்கள் கூறி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ஆப்கானுக்குள் ஐ.எஸ்., உள்ளிட்ட மற்ற பயங்கரவாத அமைப்புகளை தலிபான்களை தலையெடுக்க விடாமல் தடுப்பார்களா என உலக நாடுகள் கவனித்து வருகின்றன.

Views: - 375

1

0