அடடே இந்த நாயிக்கு என்ன ஒரு அறிவு – காயமடைந்த உரிமையாளரின் அனுதாபத்தை பெற செய்த தந்திரம்

20 January 2021, 9:07 am
Quick Share

பிரிட்டனில், தனது உரிமையாளருக்கு காலில் அடிபட்டிருந்த நிலையில், அவருக்கு அவரது துன்பம் தெரியாமல் இருக்கும் பொருட்டு, தனது காலில் அடிபட்டது போன்று நடித்து அவரது அனுதாபத்தை பெற நாய் நடித்த வீடியோ சமூகவலைளதங்களில் வைரலாகி வருகிறது.

மனிதர்களின் நெருங்கிய நண்பர்களாக நாய்கள் திகழ்ந்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. நாய் மட்டுமல்லாது குரங்குகள், கிளிகள் உள்ளிட்டவைகளும் மனிதர்களோடு இணைந்து பழகி வருகின்றன. பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசித்து வருபவர் ரசெல் ஜோன்ஸ். இவருக்கு காலில் அடிபட்ட நிலையிலும், தனது நாயை அழைத்துக்கொண்டு தினமும் வாக்கிங் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். வாக்கிங்கின்போது தனது உரிமையாளர் கஷ்டப்படுவதை பார்த்த அந்த நாய், தனது காலிலும் அடிபட்டது போல் நடந்து கொண்டது. உண்மையிலேயே, நாய்க்கு அடிபட்டு விட்டதோ என்று நினைத்த ரசெல், நண்பரின் உதவியுடன் நாயை மருத்துவனையில், ரசெல் அனுமதித்தார். அங்கு நாய்க்கு எக்ஸ் ரே உள்ளிட்ட சோதனைகள் நாய்க்கு மேற்கொள்ளப்படன. அப்போது தான் அவருக்கு ஒரு உண்மை தெரியவந்தது. நாய்க்கு அடிபடவில்லை. அது தனது அனுதாபத்தை பெறவே, அடிபட்டது போன்று நடந்து கொண்டதை அவர் உணர்ந்தார்.

நாய்க்கு மேற்கொண்ட  சோதனைகளுக்காக, ரசெல், 300 பிரிட்டிஷ் பவுண்ட் ( இந்திய மதிப்பில் ரூ.29,800) மருத்துவத்திற்காக செலவழித்தது குறிப்பிட்டத்தக்கது.
காலில் கட்டுடன் ரசெலும், நாயும் தனது காலில் கட்டுடன் வாக்கிங் செல்லும் வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதனை செய்தியாகவே, SkyNews Australia பத்திரிகை செய்தியாகவே வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 2

0

0