வின்ஸ்டன் சர்ச்சிலின் ஓவியத்தை ஏலம் விட்ட ஏஞ்சலினா ஜோலி! எவ்வளவுக்கு விற்றது தெரியுமா?
3 March 2021, 8:23 amசர்வாதிகாரி வின்ஸ்டன் சர்ச்சில் வரைந்த ஓவியத்தை வைத்திருந்த பிரபல ஹாலிவுட் நடிகை, அதனை ஏலம் விட, 11.5 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது. இந்திய மதிப்பில் இதன் மதிப்பு சுமார் 84 கோடி ரூபாய்! அம்மாடியோவ்..!!!
இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், அமெரிக்க அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்டுக்கு அன்பளிப்பாக வழங்கிய ஓவியம், பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி வசம் இருந்தது. இந்த ஓவியத்தை இரண்டாம் உலக போரின் போது ஹிட்லரின் நாஜி படை தாக்குதலை சமாளிக்க காஸாபெலன்கா நகரில் 1943ல் கூட்டம் ஒன்றை நடத்தினார்.
நேச நாடுகளின் உதவியை கோருவதற்காக நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில், கலந்து கொண்ட அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பிராங்கிளின் ரூஸ்வெல்ட்டுக்கு, தனது கையால் வரைந்த ஓவியத்தை சர்ச்சில் பரிசாக வழங்கினார். ஓவியத்தில் அவர், மொரோக்கா நாட்டின் மர்ராகெஷ் பகுதியில் அமைந்துள்ள குதூபியா மசூதியை வரைந்திருந்தார்.
வரலாற்று சிறப்புமிக்க இந்த ஓவியத்தை கடந்த 2011 ஆம் ஆண்டு முதல், பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி – பிராட் பிட் குடும்பம் வசம் இருந்தது. இந்நிலையில், இதனை ஏலம் விட ஏஞ்சலினா முடிவு செய்தார். இதன்படி ஏலம்விடப்பட்ட இந்த ஓவியம், 11.5 மில்லியன் டாலருக்கு (ரூ.84 கோடி) ஏலம் போனது. ஆனால் இந்த ஓவியத்தை அவர் ஏன் தற்போது விற்றார் என்ற காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
0
0