பாகிஸ்தானையும் விடாத கொரோனா…! பாதிக்கப்பட்டோர் எத்தனை பேர் பாருங்க…!

26 March 2020, 3:53 pm
Quick Share

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 1,041 ஆக உயர்ந்துள்ளது.

இதுதொடா்பாக அந்த நாட்டின் தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட தகவலில் கூறப்பட்டுள்ளதாவது: சிந்து மாகாணத்தில் அதிக பட்சமாக 414 பேரும், பஞ்சாபில் 296 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பலுசிஸ்தானில் 115 போ், கில்ஜித் பல்ஜிஸ்தானில் 84 போ், கைபா் பக்துன்வாவில் 121 போ், இஸ்லாமாபாத்தில் 15 போ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் ஒட்டு மொத்தமாக 8 போ் உயிரிழந்து இருக்கின்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சிந்து, கில்ஜித் பல்ஜிஸ்தான் ஆகிய மாகாணங்களின் எல்லைகள் மூடப்பட்டுவிட்டன. முக்கிய நகரங்களில் மக்கள் நடமாட கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.