ஹபீஸ் சயீத்துக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை..! பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

19 November 2020, 4:57 pm
Saeed_UpdateNews360
Quick Share

மும்பை பயங்கரவாத தாக்குதல் சூத்திரதாரி மற்றும் ஜமாத் உத் தவா தலைவர் ஹபீஸ் சயீத்துக்கு இரண்டு பயங்கரவாத வழக்குகளில் பாகிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. 

ஐநாவால் அங்கீகரிக்கப்பட்ட பயங்கரவாதியான ஹபீஸ் சயீத் மீது அமெரிக்கா 10 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகையை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 17 அன்று பயங்கரவாத நிதி வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டு பயங்கரவாத நிதி வழக்குகளில் அவருக்கு பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

அவர் லாகூரின் உயர் பாதுகாப்பு வளையத்தில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

“லாகூரின் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் இன்று ஜமாத் உத் தவாவின் நான்கு தலைவர்களுக்கு மேலும் இரண்டு வழக்குகளில் தண்டனை விதித்துள்ளது” என்று நீதிமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சயீத் மற்றும் அவரது இரு நெருங்கிய உதவியாளர்களான ஜாபர் இக்பால் மற்றும் யஹ்யா முஜாஹித் ஆகியோருக்கு தலா 10 மற்றும் ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஜமாத் உத் தவா தலைவரின் மைத்துனர் அப்துல் ரஹ்மான் மக்கிக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜமாத் உத் தவா அமைப்பினர் மீது மொத்தம் 41 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவற்றில் 24 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. சயீத் மீது இதுவரை நான்கு வழக்குகளில் தீர்ப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0