அத்தனை விமானிகளும் போலியா..? பாகிஸ்தான் அரசு வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்..!

21 December 2020, 2:22 pm
Pakistan_Fake_Pilots_UpdateNews360
Quick Share

விமானிகளின் உரிமங்களுக்கான தேர்வின் போது நடந்த முறைகேடு குறித்த விசாரணையைத் தொடர்ந்து, 50 வணிக விமானிகளின் உரிமங்களை பாகிஸ்தான் அரசு ரத்து செய்துள்ளது.

சர்வதேச சிவில் விமான அமைப்பின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, 860 வணிக விமானிகளின் உரிமங்களை அதிகாரிகள் மதிப்பாய்வு செய்துள்ளதாகவும், முழுமையான ஆய்வுக்குப் பின்னர், அவர்களில் 50 பேரின் உரிமத்தை ரத்து செய்ததாகவும் பாகிஸ்தான் அரசு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.

கூடுதல் அட்டர்னி ஜெனரல் தாரிக் முகமது கோகர் தாக்கல் செய்த அறிக்கையின்படி, விமானிகள் தேசிய விமான நிறுவனம் மற்றும் பிற பாகிஸ்தான் தனியார் மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்காக பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது.

அறிக்கையின்படி, முறைகேடான வழிகளில் உரிமங்களைப் பெற்ற விமானிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான பணி பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்புக்கு (எஃப்ஐஏ) வழங்கப்பட்டது.

முன்னதாக, பாகிஸ்தான் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் கடந்த ஆண்டு ஜனவரி 25’ஆம் தேதி விமானிகளின் உரிமங்களுக்கான பரிசோதனையின் போது கவனிக்கப்பட்ட முறைகேடு குறித்து விசாரிக்க ஒரு விசாரணை வாரியத்தை அமைக்க விமானச் செயலாளரைக் கோரியது.

பின்னர், விசாரணைக் குழு அமைக்கப்பட்டது மற்றும் கணினி அறிக்கை தடயவியல் சான்றுகளின்படி, 262 விமானிகளின் உரிமங்கள் போலித் தேர்வுகளின் அடிப்படையில் அமைந்தன என்று அதன் அறிக்கை முடிவு செய்தது.

ஜூன் 26, 2020 அன்று, பாகிஸ்தான் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் 262 விமானிகளை தடை செய்தது மற்றும் சரிபார்ப்புக்காக அவர்களின் உரிமங்களை நிறுத்தியது. பாகிஸ்தானுக்கு வெளியே பணிபுரிபவர்கள் உட்பட பிற விமானிகளைப் பற்றி எதிர்மறையான எண்ணத்தைத் தவிர்ப்பதற்காக 262 விமானிகளின் பெயர்கள் பகிரங்கப்படுத்தப்பட்டன.

இருப்பினும், சரிபார்ப்பிற்குப் பிறகு, 172 உரிமங்கள் சரியான முறையில் பேராபப்ட்டுள்ளதாகவும், 50 விமானிகளின் உரிமங்கள் போலியானவை எனக் கண்டறியப்பட்டதால் அமைச்சரவையின் ஒப்புதலுடன் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் மேலும் சில விமானிகளின் உரிமங்கள் சரிபார்ப்புக்காக சோதனையில் உள்ளன என்றும் அவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் பாகிஸ்தான் சிவில் விமானப் போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவித்தன.

Views: - 0

0

0