கணவனை கீழே தள்ளி தர்மஅடி கொடுத்த மனைவி..!!

13 February 2020, 7:44 pm
Pakistan Illagal Mrg- updatenews360
Quick Share

பாகிஸ்தான் : மனைவிக்கு தெரியாமல் மூன்றாவது திருமணம் செய்ய முயற்சி செய்த கணவனை கையும் களவுமாக மாட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

பாகிஸ்தான் கராச்சியைச் சேர்ந்த ரபிக் என்பவருக்கு திருமண ஏற்பாடுகள் நிச்சயிக்கப்பட்டு, திருமண வரவேற்பு நிகழ்சிக்காக மணமகன் மற்றும் மணப்பெண் மற்றும் மணப்பெண் உறவினர்கள் தயராகினர்.

அப்போது ஒரு பெண் திடீரென தனது உறவினர்களுடன் திருமண அரங்கத்திற்கு மணமகனை சமத்தியாக தாக்கினர். அந்த பெண் மட்டும் இல்லை உடன் வந்த உறவினர்களும் ரபிக் என்பவரை சரமாரியாக அடிக்க துவங்கினர்.

இதையடுத்து மணபெண்ணின் உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க, போலீசார் வந்ததும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அனைவரையும் தடுத்து நிறுத்தி போலுசார் விசாரித்ததில், அடித்த பெண் ரபீக்கின் முதல் மனைவி என்று தெரியவந்தது.

அடித்த மதிஹா என்பதும், அவருக்கு தெரியாமல் ஏற்கனவே ரபீக் இரண்டாவது திருமணம் செய்ததும் தெரியவந்தது. பின்னர் மதிஹாவிடம் மன்னிப்பு கேட்டு அவருடனே தொடர்ந்து வாழ்ந்து வந்ததாகவும், தற்போது மூன்றாவது திருமணம் செய்வதாக வந்த தகவலையடுத்து தாம் இங்கு வந்ததாக கூறினார். மணமகனை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசரணை மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து நீதிமன்றத்தில் வழக்குபதிய போலீசார் அறிவுரை கூறி சென்றனர். இந்த வீடியோ வெளியாகி பரபரப்பை உண்டாக்கியுள்ளது.