பாகிஸ்தான் சுரங்க விபத்து..! 22 பேர் பலியான சோகம்..! மீட்புப் பணிகள் தீவிரம்..!

9 September 2020, 12:22 pm
Pakistan_Marble_Mine_Accident_UpdateNews360
Quick Share

பாகிஸ்தானின் சியாரத் கர் மலைப் பகுதியில் ஒரு பளிங்கு குவாரி ஒன்றில் ஏற்பட்ட ஒரு பெரிய சுரங்க விபத்தில் 22 பேர் இறந்துள்ளனர். மேலும் பலர் உள்ளே சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது. உயர்தர பளிங்குக்கு பெயர் பெற்ற ஆப்கானிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள இந்த பகுதியில் ஆறு யூனிட் பளிங்கு சுரங்கங்கள் திங்கள்கிழமை இரவு சரிந்தன.

திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட சுரங்க சரிவில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது. 

இறந்தவர்களில் பெரும்பான்மையானவர்கள் தொழிலாளர்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள கைபர் பக்துன்வாவின் சஃபி நகரத்தின் அடிவாரத்தில் கூடியிருந்த சிலரும் அடங்குவர். இது சிந்து மாகாண தலைநகர் பெஷாவரில் இருந்து 85 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

மொஹ்மண்ட் மாவட்ட காவல்துறை அதிகாரி மொஹமண்ட் தாரிக் ஹபீப், மக்கள் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளனர் என்று கூறினார். திங்கள்கிழமை இரவு இருள் காரணமாக மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டதாகவும், மீட்புப் பணிகளுக்காக நேற்று கனரக இயந்திரங்கள் திரட்டப்பட்டதாகவும் அவர் கூறினார்.

துணை கமிஷனர் இப்திகர் ஆலம், இறப்பு எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

சுரங்கம் இடிந்து விழுந்தபோது சுமார் 45 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் பணிகளில் இருந்ததாக டான் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. இறந்து போன 22 பேரைத் தவிர்த்து தற்போது வரை 9 பேர் மீட்கப்பட்டுள்ளதாக மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் (பி.டி.எம்.ஏ) தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மீட்பு அதிகாரி பிலால் பைஸி தெரிவித்தார்.

“இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கை தற்போது நடந்து வருகிறது. பெஷாவரில் இருந்து ஐந்து ஆம்புலன்ஸ் மற்றும் ஒரு மீட்பு வாகனம் மொஹ்மண்டிற்கு அனுப்பப்பட்டுள்ளன” என்று பி.டி.எம்.ஏ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மொஹ்மண்ட் மாவட்டம் ஒரு பழங்குடி ஏஜென்சி பகுதியாகும். இது பளிங்கு கற்களுக்கு பிரபலமானது. தற்போதைய விபத்து பாறை சரிவு சம்பவம் 2015’ஆம் ஆண்டில் மொஹ்மண்டில் 12 தொழிலாளர்கள் கொல்லப்பட்ட இதேபோன்ற சுரங்க சரிவு சம்பவத்தின் நினைவுகளை மீண்டும் கொண்டு வந்து மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Views: - 5

0

0