பிரான்ஸ் அதிபர் ஹிட்லருடன் ஒப்பீடு..! எதிர்ப்புகள் வலுத்ததால் அவசர அவசரமாக ட்வீட்டை நீக்கிய பாகிஸ்தான் அமைச்சர்..!

23 November 2020, 10:53 am
macron_pakistan_protests_updatenews360
Quick Share

பிரெஞ்சு  அதிபர் இம்மானுவேல் மெக்ரனின் ஆட்சியை ஹிட்லரின் நாஜிக்களுடன் ஒப்பிட்டதற்கு பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, தனது சர்ச்சைக்குரிய ட்வீட்டை பாகிஸ்தான் அமைச்சர் ஷிரீன் மசாரி நீக்கிவிட்டார். நபிகள் நாயகத்தின் சார்லி ஹெப்டோ கேலிச்சித்திரங்கள் விவாகரத்தில் பிரெஞ்சு ஜனாதிபதிக்கு எதிராக மசாரி ஆட்சேபகரமான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

நேற்று ஷிரீன் மசாரி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “நாஜிக்கள் யூதர்களுக்கு செய்ததை மக்ரோன் முஸ்லீம்களுக்குச் செய்கிறார். யூதர்கள் தங்கள் ஆடைகளில் மஞ்சள் நட்சத்திரத்தை அணிய வேண்டிய கட்டாயத்தில் இருந்ததைப் போலவே, அடையாளம் காண்பதற்காக முஸ்லீம் குழந்தைகளுக்கும் அடையாள எண்கள் கிடைக்கும்.” என ஹிட்லருடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்திருந்தார்.

இது ஒரு அரசியல் சர்ச்சைக்கு வழிவகுத்த நிலையில், பிரான்சுக்கான பாகிஸ்தானின் தூதரிடம் வலுவான எதிர்ப்பை தெரிவித்தது.

பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் தனது கடிதத்தில், “ஷிரீன் மசாரியின் வெறுக்கத்தக்க வார்த்தைகள் அப்பட்டமான பொய்கள். இது வெறுப்பு மற்றும் வன்முறை சித்தாந்தத்தால் நிரம்பியுள்ளன. இதுபோன்ற அவதூறான கருத்துக்கள் இழிவானவை. அவற்றை நாங்கள் கடுமையாக நிராகரிக்கிறோம்” என்று கூறினார்.

“பாகிஸ்தான் இந்த அறிக்கையை சரிசெய்து மரியாதை அடிப்படையில் உரையாடலின் பாதையில் திரும்ப வேண்டும்” என்று பிரெஞ்சு அமைச்சர் மேலும் கூறினார்.

பிரான்ஸ் வெளியுறவு அமைச்சரின் அறிவிப்புக்குப் பிறகு, ஷிரீன் மசாரி தனது ட்வீட்டை நீக்கி ட்விட்டரில் ஒரு விளக்கத்தை வெளியிட்டார். அவர் தனது ட்வீட்டில் மேற்கோள் காட்டிய கட்டுரை போலி என்பதை உறுதிப்படுத்தினார். மேலும் அவர் தனது ட்வீட்டையும் நீக்கிவிட்டார்.

நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்கள் மற்றும் நாட்டில் முஸ்லீம் தீவிரவாதிகளை கையாண்டது குறித்து இம்மானுவேல் மக்ரோனின் நிலைப்பாடு தொடர்பாக பாகிஸ்தானுக்கும் பிரான்சுக்கும் இடையிலான உறவுகள் சமீபத்தில் மோசமடைந்துள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Views: - 22

0

0