“இந்தியா மீது அணுகுண்டு தாக்குதல், ஆனால் முஸ்லீம்களுக்கு ஒன்றும் ஆகாது” :- பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் தடாலடி

21 August 2020, 10:22 am
Pak_Minister_Sheikh_Rashid_UpdateNews360
Quick Share

பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷீத் இந்தியாவுடன் மீண்டும் யுத்தம் வந்தால் அணுசக்தியைக் கொண்டு தாக்குவதாக அச்சுறுத்தியுள்ளார்.

இந்த ஆயுதங்கள் தாக்குதலின் போது முஸ்லீம்களை காப்பாற்றும் வகையில் இருக்கும் என பாகிஸ்தான் ஊடகமான சமா டிவிக்கு புதன்கிழமை அளித்த பேட்டியில் ரஷீத் கூறினார். பாகிஸ்தானில் மிகவும் துல்லியமான ஆயுதங்கள் உள்ளன என்றும் அவை சிறிய அளவிலானவவை மற்றும் சரியானவை என்றும் கூறினார்.

தற்பெருமை பாணி மற்றும் அயல்நாடுகளை அச்சுறுத்தும் வகையில் கருத்து கூறுவதற்கு பெயர் பெற்ற பாகிஸ்தான் மந்திரி, ஆயுதங்கள் சில பிராந்தியங்களை மட்டுமே குறிவைக்கும் என்றும், அசாம் கூட இப்போது அவர்களின் தாக்குதலுக்கு உட்பட்டது என்றும் கூறினார்.

ஒரு வழக்கமான போரில் பாகிஸ்தானுக்கு வேறு வழியில்லை என்றும், பாதகமாக ஏதாவது நடந்தால் அதுவே முடிவாக இருக்கும் என்றும் ரஷீத் எச்சரித்தார்.

“பாகிஸ்தான் இந்தியாவால் தாக்கப்பட்டால், வழக்கமான போருக்கு எந்த வாய்ப்பும் இல்லை. இது ஒரு இரத்தக்களரி மற்றும் அணுசக்தி யுத்தமாக இருக்கும். இது நிச்சயமாக ஒரு அணுசக்தி யுத்தமாக இருக்கும். சிறிய மற்றும் சரியான ஆயுதங்களை நாம் உருவாக்கி வைத்துள்ளோம். எங்கள் ஆயுதங்கள் முஸ்லீமைக் காப்பாற்றும். பாகிஸ்தானின் தாக்குதல் வரம்பில் இப்போது அசாமையும் உள்ளடக்கியுள்ளோம். வழக்கமான போரில் பாகிஸ்தானுக்கு வேறு வழியில்லை. எனவே ஏதாவது நடந்தால் அது முடிவடையும் என்று இந்தியாவுக்குத் தெரியும்.” என்று ரஷீத் பேட்டியில் கூறினார்.

வழக்கமான போரில் ஒரு போட்டி அல்ல என்ற தர்க்கத்தை சுட்டிக்காட்டி பாகிஸ்தான் தலைமை இந்தியாவுக்கு எதிரான அணுசக்தி யுத்தத்தை அச்சுறுத்தியுள்ளது. 2019’ல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுடனான அணுசக்தி யுத்தம் குறித்து பல சந்தர்ப்பங்களில் பேசியது குறிப்பிடத்தக்கது.

அதே ஆண்டில், ரஷீத் தனது நாட்டில் 125-250 கிராம் அளவிலான அணுகுண்டுகள் இருப்பதாகக் கூறியிருந்தார். இது இந்தியாவில் இலக்கு வைக்கப்பட்ட பகுதியைத் தாக்கக்கூடும்.

Views: - 25

0

0