ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு தற்காலிக மாகாண அந்தஸ்து..! உள்நாட்டு அரசியலை எதிர்கொள்ள இம்ரான் கான் திடீர் அறிவிப்பு..!

1 November 2020, 7:35 pm
pakistan_pm_imran_khan_updatenews360
Quick Share

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஒரு பகுதியான கில்கிட் பால்டிஸ்தானுக்கு தற்காலிக மாகாண அந்தஸ்தை வழங்குவதற்கான தனது முடிவை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று அறிவித்தார். கில்கிட் பால்டிஸ்தான் என்பது இந்தியாவுடன் இணைந்த பிரிக்கப்படாத ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதியாகும்.

இன்று கில்கிட்டில் நடந்த பேரணியில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஒரு நாட்டின் இறையாண்மையையும் ஒற்றுமையையும் பாதுகாக்க ஒரு வலுவான இராணுவம் இன்றியமையாதது என்றார்.

எதிர்க்கட்சி கூட்டணியான பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தின் கடும் விமர்சனத்துக்கு உள்ளான பாகிஸ்தான் ராணுவத்தை பாதுகாக்க இந்த அறிவிப்பை பயன்படுத்த இம்ரான் கான் முயற்சித்தார்.

டிசம்பர் மாதம் கில்கிட் பால்டிஸ்தானுக்கான தேர்தலை பாகிஸ்தான் அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு இது வருகிறது. இதற்கிடையே இந்த நடவடிக்கைக்கு இந்தியா தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

அடுத்த மாதம் கில்கிட்-பால்டிஸ்தான் என்று அழைக்கப்படும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியில் சட்டமன்ற தேர்தலை நடத்துவது போன்ற நடவடிக்கைகள், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் சில பகுதிகளில் பாகிஸ்தான் மேற்கொண்ட சட்டவிரோத ஆக்கிரமிப்பை மறைக்க முடியாது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Views: - 20

0

0

1 thought on “ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு தற்காலிக மாகாண அந்தஸ்து..! உள்நாட்டு அரசியலை எதிர்கொள்ள இம்ரான் கான் திடீர் அறிவிப்பு..!

Comments are closed.