இந்திய விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் பாகிஸ்தான்..! விவசாயிகள் போராட்டம் குறித்த கருத்தால் சர்ச்சை..!

7 December 2020, 2:38 pm
Farmers_Protest_UpdateNews360
Quick Share

டெல்லியின் எல்லையில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டம் குறித்து பாகிஸ்தான் அமைச்சர்களில் ஒருவர் கருத்து தெரிவித்ததன் மூலம் பாகிஸ்தான் இறுதியாக இந்தியாவின் மற்றொரு உள்நாட்டு பிரச்சினையில் மூக்கை நுழைத்துள்ளது. 

இம்ரான் கான் அமைச்சரவையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருக்கும் சவுத்ரி ஃபவாத் உசேன், இந்திய விவசாயிகளிடையே பிளவுகளை ஏற்படுத்த முயற்சி செய்யும் வகையில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். மேலும் இதயமற்ற நரேந்திர மோடி அரசு பஞ்சாப் விவசாயிகளைப் பொருட்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டினார்.

குஜராத்தி இந்துத்துவா மீது குற்றம் சாட்டிய பாகிஸ்தான் அமைச்சர் இந்திய விவசாயிகளிடம் பரிதாபம் காட்டும் முயற்சியில் அவர்களை சகோதரர்கள் என்று அழைத்தார்.

“12 வது நாள் ஆர்ப்பாட்டங்கள் நடக்கிறது. ஆனால் டெல்லி கூட கேட்கவில்லை. குஜராத்தி இந்துத்துவத்தால் ஈர்க்கப்பட்ட பாஜக அரசுக்கு பஞ்சாபி விவசாயிகள் மீது அக்கறை இல்லை. இந்திய அரசாங்கத்தின் வெட்கக்கேடான பஞ்சாப் எதிர்ப்பு கொள்கைகள் இதயமற்றவை. எல்லையின் மறுபுறத்தில் உள்ள எனது பஞ்சாபி விவசாய சகோதரர்களுக்காக என் இதயம் துடிக்கிறது.” என்று ஹுசைன் ட்வீட் செய்துள்ளார்.

மேலும் பஞ்சாபி விவசாயிகளுக்காக பேசுமாறு பாகிஸ்தான் அமைச்சர் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

“எங்கும் அநீதி என்பது எல்லா இடங்களிலும் நீதிக்கு அச்சுறுத்தல். பஞ்சாபி விவசாயிகளுக்கு நடக்கும் அநீதிக்கு எதிராக நாம் பேச வேண்டும் மோடி கொள்கைகள் முழு பிராந்தியத்திற்கும் அச்சுறுத்தல்.” என்று ஹுசைன் மற்றொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கனடா பிரதமரின் கருத்தால் இந்தியா கோபத்தில் உள்ள நிலையில், தற்போது இந்திய விவசாயிகளிடையே பிளவை உண்டாக்கும் வகையில் பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பதைப் போல் கருத்துக்கூறி, பாகிஸ்தான் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Views: - 14

0

0