இஸ்லாமிய பிரிவினைவாதிகளுக்கு எதிராக பிரான்ஸ் நடவடிக்கை எடுப்பது தவறா..? இம்ரான் கான் கருத்தால் சர்ச்சை..!

25 October 2020, 7:42 pm
macron_imran_updatenews360
Quick Share

முகமது நபியின் கார்ட்டூன்களை வெளியிடுவதை இம்மானுவேல் மெக்ரன் ஆதரித்து, இஸ்லாமிய பிரிவினைவாதத்திற்கு எதிரான போரை அறிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பிரெஞ்சு ஜனாதிபதி இஸ்லாத்தைத் தாக்கி முஸ்லீம்களைத் தூண்டிவிட்டதாக குற்றம் சாட்டினார்.

இம்மானுவேல் மெக்ரனை குற்றம் சாட்டிய இம்ரான் கான், இது தீவிரமயமாக்கலுக்கு வழிவகுக்கிறது என்றும் ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான முஸ்லீம்களின் உணர்வுகளைத் தாக்கி காயப்படுத்தியதாக கூறி பிரெஞ்சு ஜனாதிபதியை கண்டித்தார்.

துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன், முஸ்லீம்களைப் பற்றிய அணுகுமுறையின் காரணமாக மெக்ரனுக்கு மனநல சிகிச்சை தேவை என்று கூறியதை அடுத்து இம்ரான் கானின் அறிக்கை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எர்டோகனிடமிருந்து ஒரு குறிப்பை எடுத்துக் கொண்ட இம்ரான் கான் ஒரு ட்வீட்டில், “ஒரு தலைவரின் ஹால்மார்க், அவர் மனிதர்களைப் பிரிப்பதை விட, மண்டேலாவைப் போலவே ஒன்றிணைக்க வேண்டும். ஆனால் பிரிக்க நினைப்பது தவிர்க்க முடியாமல் தீவிரமயமாக்கலுக்கு வழிவகுக்கும்.” எனக் கூறினார்.

பாகிஸ்தானில் ஷியா முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் தொடர்ந்து தாக்கப்படுவதோடு அவமானப்படுத்தப்பட்டு கொல்லப்படுகிறார்கள். ஆனால் இதைக் கண்டுகொள்ளாத இம்ரான் கான், பிரெஞ்சு ஜனாதிபதியை வன்முறையைச் செய்யும் பயங்கரவாதிகளை விட இஸ்லாத்தைத் தாக்குவதன் மூலம் இஸ்லாமிய அச்சுறுத்தலை ஊக்குவிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

“இஸ்லாத்தைத் தாக்குவதன் மூலம், அதைப் பற்றி எந்தவிதமான புரிதலும் இல்லாமல், ஜனாதிபதி மெக்ரன் ஐரோப்பாவிலும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான முஸ்லீம்களின் உணர்வுகளைத் தாக்கி காயப்படுத்தியுள்ளார்” என்று இம்ரான் கான் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

பிரான்சில் ஒரு இஸ்லாமிய தீவிரவாதியால் ஒரு ஆசிரியரின் தலை துண்டிக்கப்பட்டது பிரான்சையும் உலகத்தையும் உலுக்கியது. இது உலகின் அனைத்து பகுதிகளிலிருந்தும் கூர்மையான எதிர்வினைக்கு வழிவகுத்தது.

இஸ்லாமிய பிரிவினைவாதிகள் மீது நடவடிக்கை எடுப்பது எப்படி ஒட்டுமொத்த இஸ்லாமியர்களுக்கும் இஸ்லாத்துக்கும் எதிராக இருக்கும் என ஒரு பக்கம் இம்ரான் கானுக்கு எதிராகவும் குரல் வலுத்து வருகிறது. இந்நிலையில் துருக்கி அதிபர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் கூறிய கருத்துக்கள் உலக நாடுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Views: - 18

0

0