பாகிஸ்தானில் விரைவு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்: 30 பேர் பரிதாப பலி..!!

7 June 2021, 11:25 am
Quick Share

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 2 விரைவு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெற்கு பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் கோட்கி மாவட்டத்தில் சர் சையது விரைவு ரயிலும், மில்லத் விரைவு ரயிலும் இன்று நேருக்கு நேர் மோதின. இந்த சம்பவத்தில் 30 பேர் பலியானதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் கோட்கி மாவட்டத்தின் போலீஸ் அதிகாரிகள் மற்றும் மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தடம் புரண்டதற்கும் அடுத்தடுத்த மோதலுக்கும் என்ன காரணம் என்பது உடனடியாகத் தெரியவில்லை. சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏராளமானோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Views: - 199

0

0