பாம்பை விரட்ட இப்படியா செய்யனும்?.: ரூ.7.5 கோடி மதிப்பிலான வீட்டை பறிகொடுத்த நபர்..மொத்த சொத்தும் காலி..!!

Author: Aarthi Sivakumar
6 December 2021, 4:01 pm
Quick Share

அமெரிக்கா: அமெரிக்காவில் பாம்பு வீட்டிற்குள் வந்த காரணத்தால் 1 மில்லியன் டாலர் வீட்டை வீட்டின் உரிமையாளரே கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பது பொதுவான பழமொழி. பாம்பை கண்டால் படையே நடுங்குவதற்கு காரணம் அவை விஷ பூச்சி, அவை தீண்டினால் நமக்கு மரணம் தான், அதனாலேயே இதனை கண்டால் பலருக்கும் பயம்.

மேரிலாந்தின் பூல்ஸ்வில்லே என்கிற பகுதியில் அதிக விஷம் கொண்ட பாம்புகள் நிறைந்து காணப்படும். எதிர்பாராதவிதமாக ஒரு நாள் பாம்பு ஒன்று அங்கிருந்த நபரின் வீட்டிற்குள்புகுந்துவிட்டது. உடனே அதை விரட்ட எண்ணிய அவர் புகையை பயன்படுத்தி பாம்பை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டார்.

இவர் நெருப்பு புகையை பயன்படுத்தி பாம்பை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அங்கிருந்த எளிதில் பற்றக்கூடிய பொருட்கள் மீது தீப்பற்றி, வீட்டின் கீழ்தளம் தொடங்கி சுவர்கள் என அனைத்திலும் தீப்பற்றி வீடு முழுவதும் எரிய தொடங்கியுள்ளது.

இதனையடுத்து வீடு கொழுந்துவிட்டு எரிவதை கண்ட அக்கம்பக்கத்தினர், உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு ஒருவழியாக தீயை அணைத்தனர்.

இதில் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை, அதே சமயம் வீட்டிற்குள் நுழைந்த அந்த பாம்பும் உயிருடன் இருந்துள்ளது. அதனை மீட்ட தீயணைப்பு துறையினர் வனப்பகுதியில் விட்டுவிட்டனர். ஆனால் பாம்பை விரட்ட முயன்றவரின் சுமார் 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.7.5 கோடி) மதிக்கத்தக்க வீடு எரிந்து நாசமாகி விட்டது குறிப்பிடத்தக்கது.

அதோடு, வீடு தீப்பிடித்து எரியும் படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவியுள்ளன.

Views: - 504

0

0