வீடியோவை ஆப் செய்யாமல் செக்ஸ்! வக்கீலின் காம லீலை ஜூம்மில் அம்பலம்

4 February 2021, 8:48 am
Quick Share

ஜூம் செயலி வழியாக நடந்த நீதிமன்ற ஆன்லைன் வழக்கு விசாரணையின் போது, வீடியோவை ஆஃப் செய்யாமல், வக்கீல் ஒருவர் செக்ஸ் வைத்து கொண்ட சம்பவம் பெரு நாட்டில் நடந்துள்ளது. இது விர்ச்சுவல் மீட்டிங்கில் லைவ்வாக ஒளிபரப்பாக பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

கொரோனா பரவலுக்கு பின், வேலை, படிப்பு, மீட்டிங் என அனைத்தும் ஆன்லைன் வழியாக நடந்து வருகிறது. மிகவும் பயனுள்ள இந்த தொழில்நுட்பம், சிலரின் அஜாக்கிரதையால், பெரும் சர்ச்சையும் உருவாக்க தவறவில்லை. இப்படி பெரு நாட்டில் நடந்த ஒரு சம்பவம், சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாமல், நாட்டுக்கே பெரும் அவமானமாக மாறி உள்ளது. பெருவில், ஜூம் செயலி வழியாக நடந்த நீதிமன்ற ஆன்லைன் வழக்கு விசாரணையில் தனது தரப்பு வாதம் முடிந்தததும், வக்கீல் லாஸ் டி சஞ்சாமயோ தனது வீடியோவை ஆப் செய்ய மறந்து விட்டார்.

பின் தனது அறையில், பெண் ஒருவருடன் செக்ஸ் வைத்து கொண்டார். கேமராவை ஆஃப் செய்யாததால், அது விர்ச்சுவல் மீட்டிங் மற்றும் டிவியில் நேரலையாக ஒளிபரப்பானது. இதனால் நீதிபதி உள்ளிட்ட அனைவரும் கடும் அதிருப்தி அடைந்தவர். மொபைலில் தொடர்பு கொள்ள முயன்ற போதும், அவர் சைலன்டில் போட்டிருந்ததால், அவர் காலை எடுக்கவில்லை. இதனால் உடனடியாக, வழக்கு விசாரணையை நீதிபதி முடித்து கொண்டார். அனைத்து இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.

கோர்ட்டின் புனிதத்தையும், வக்கீல் தொழிலின் கண்ணியம் மற்றும் மரியாதையையும் சஞ்சாமயோ கெடுத்துவிட்டதாக நீதிபதி குற்றம்சாட்டி உள்ளார். அவருக்கு அனைத்து தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சஞ்சாமயோ மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு பார் கவுன்சிலும் அறிவித்துள்ளது. நாட்டிற்கே களங்கள் விளைவித்ததாக, பெரு அரசும் விசாரணையை துவக்கி உள்ளது. அவர் செக்ஸ் வைத்துக் கொண்ட பெண், அவரிடம் வழக்கு ஒன்றிற்காக வந்தவர் என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனா இவர் பண்ணதெல்லாம் ஓவர்… என்ன சொல்றீங்க!

Views: - 2

0

0