லெபனானில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து விபத்து: 20 பேர் சம்பவ இடத்திலேயே பலி…80 பேருக்கு தீவிர சிகிச்சை..!!

Author: Aarthi Sivakumar
16 August 2021, 9:13 am
Quick Share

பெய்ரூட்: மத்திய கிழக்கு நாடான லெபனானில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 80 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

லெபனான் நாட்டின் அண்டை நாடான சிரியா எல்லை அருகே உள்ளது லெய்ல் கிராமம். லெபனானில் இருந்து பெட்ரோல், டீசல் ஆகியவை சிரியாவுக்கு சட்டவிரோதமாக கடத்தப்படுகின்றன. அதேபோல், கடத்தி வரப்பட்ட பெட்ரோல் டேங்கர் லாரி ஒன்றை லெபனான் ராணுவம் பறிமுதல் செய்து, லெய்ல் கிராமத்தில் நிறுத்தி வைத்திருந்தது.

நேற்று காலை அந்த டேங்கர் லாரி திடீரென வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் 20 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட 80 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். லெபனான் ரெட் கிராஸ் உறுப்பினர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காயமடைந்து உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்ற ரத்த தானம் செய்ய வரும்படி பொதுமக்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. 80 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்புஅதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Views: - 279

0

0