மாயமான விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது : இந்தோனேசிய அதிபர் அறிவிப்பு!!

Author: Udayachandran
10 January 2021, 4:26 pm
Indonesia Plane- Updatenews360
Quick Share

காணாமல் போன ஸ்ரீவிஜயா ஏர் விமானம் ஜாவா கடலில் விழுந்து நொறுங்கியதாக இந்தோனேசிய அதிபர் அறிவித்துள்ளார்.

நேற்ற இந்தோனேஷியா ஜார்த்தே விமான நிலையத்தில் இருந்து 62 பேருடன் புறப்பட்ட ஸ்ரீவிஜயா விமானம் 11 ஆயிரம் அடிக்கு மேல் பறந்து கொண்டிருந்த போது ரேடாரில் இருந்து மறைந்தது.

இதையடுத்து விமானம் மறைந்த இடத்தில் இருந்த கடல் பகுதியல் மீட்பு படை குழுவினர்கள் தேடுதல் வேட்டையை ஆரம்பித்தனர். அப்போது விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து விபத்து குறித்து போக்குவரத்து அமைச்சகம் அளித்த தகவலின் அடிப்படையில் அதிகாரப்பூர்வமாக விமானம் விபத்துக்குள்ளானதாக இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ அறிவித்துள்ளார்.

Views: - 63

0

0