அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார் பிரதமர் மோடி:பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதம்

Author: Udhayakumar Raman
24 September 2021, 10:17 pm

Indian Prime Minister Narendra Modi shakes hands with Vice President Joe Biden during his address to a joint meeting of Congress on Capitol Hill in Washington, Wednesday, June 8, 2016. (AP Photo/Manuel Balce Ceneta)

Quick Share

மூன்று நாட்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார்.

ஜோ பைடன் அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரியில் பதவியேற்ற பின் முதல் முறையாக அவரை பிரதமர் மோடி சந்தித்துள்ளார். இதற்கு முன்பு 2014இல், ஒபாமா அரசில், துணை அதிபராக ஜோ பைடன் பணியாற்றிய போது பிரதமர் மோடி அவரை சந்தித்தார். இந்த ஆண்டில் பல முறை தொலைபேசி மூலம் இருவரும் உரையாடியுள்ளனர். இன்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், பிரதமர் மோடிக்கு ஜோ பைடன் விருந்தளிக்கிறார். அதன் பின்னர் இருவரும், இரு தரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துதல், பாதுகாப்பு மற்றும் ராணுவ விவகாரங்களில் கூட்டு முயற்சிகளை பலப்படுத்துதல், ஆப்கானிஸ்தான் நிலவரம், ஆசிய பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர் கொள்ளுதல், சர்வதேச பயங்கரவாதம் பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். அப்போது துணை அதிபர் கமலா ஹாரிசும் உடன் இருந்தார். முன்னதாக வெள்ளை மாளிகை முன்பாக மோடியை வரவேற்க இந்தியர்கள் திரண்டிருந்தனர். கலாச்சார நடன நிகழ்ச்சிகளும் நடந்தன.

Views: - 313

0

0