உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு : உக்ரைன் – ரஷ்யா போருக்கு மத்தியில் முதன்முறையாக நடந்த நிகழ்வு!!

Author: Udayachandran RadhaKrishnan
20 May 2023, 4:02 pm
Ukraine Modi - Updatenews360
Quick Share

ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நேற்று தொடங்கியது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க பிரதமர் மோடி ஹிரோஷிமா சென்றுள்ளார்.

அங்கு குழுமியிருந்த இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதற்கிடையே, பிரதமர் மோடி ஹிரோஷிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை இன்று திறந்து வைத்தார்.

இதற்கிடையே, மாநாட்டின் இடையே ஜி7 நாடுகளின் தலைவர்கள் உள்பட பல்வேறு உலக தலைவர்களை பிரதமர் மோடி தனித்தனியாகச் சந்தித்தார்.
அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், ஜி7 மாநாட்டில் பங்கேற்க வந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியையும் பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததற்கு பிறகு முதல் முறையாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி இன்று சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 590

0

0