தனி சிந்து நாடு கேட்டு பாகிஸ்தானில் வெடித்தது போராட்டம்..! மோடி தலையிட்டு தீர்வு காண வலியுறுத்திய போராட்டக்காரர்கள்..!
18 January 2021, 2:37 pmபாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் கோரி நடந்த பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற உலகத் தலைவர்களின் போஸ்டர்களும் பதாகைகளும் பயன்படுத்தப்பட்டுளளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குலாம் முர்தாசா சையத்தின் 117’வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று சான் நகரில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.
பேரணியில் பங்கேற்றவர்கள் சுதந்திர சார்பு கோஷங்களை எழுப்பினர் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் தங்கள் சுய நிர்ணய உரிமையில் தலைமயிடுமாறு கோரி, அவர்களின் படங்களுடன் கூடிய போஸ்டர்களுடன் கோஷங்களை எழுப்பினர்.
பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடன், நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் பலரின் போஸ்டர்களும் பதாகைகளும் பங்கேற்பாளர்களால் உயர்த்தப்பட்டன.
பாகிஸ்தானில் இருந்து சிந்து தேசத்தின் சுதந்திரத்திற்காக மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் தலையிட வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரினர்.
சிந்து சமவெளி நாகரிகம் மற்றும் வேத மதத்தின் வீடு சிந்து என்று போராட்டக்காரர்கள் கூறினர். இது சட்டவிரோதமாக பிரிட்டிஷ்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. 1947’இல் இந்தியாவின் பிரிவினையில் பாகிஸ்தானின் தீய இஸ்லாமிய கைகளில் பிரிட்டிஷ்காரர்களால் வழங்கப்பட்டதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
சிந்து பாகிஸ்தானிலிருந்து சுதந்திரத்தை விரும்புகிறது என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி இந்த பேரணி நடத்தப்பட்டது. சமீப காலமாக பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இம்ரான் கான் அரசு மற்றும் ராணுவ ஒடுக்குமுறையால், தனி நாடு கோஷம் வலுத்து வருவது குறிபிடத்தக்கது.
குலாம் முர்தாசா சையத் ஒரு முக்கிய சிந்தி அரசியல்வாதி ஆவார். அவர் தனது தீர்க்கமான செயல்பாட்டின் மூலம், தனி சிந்தி அடையாளத்திற்கான கருத்தியல் அடித்தளத்தை முன்மொழிந்தார் மற்றும் சிந்துதேஷ் இயக்கத்தின் அடித்தளத்தை அமைத்தார். நவீன சிந்தி தேசியவாதத்தின் ஸ்தாபகர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார்.