காவல் அதிகாரி முகத்தில் காரித் துப்பிய பெண் கைது!! (வீடியோ)

6 November 2020, 6:48 pm
Spit On Police - Updatenews360
Quick Share

அமெரிக்கா : தேர்தல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் காவல் அதிகாரியின் முகத்தில் எச்சில் துப்பியதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில, அதிபர் டிரம்ப் வெற்றி பெற்றதாக கூறி தேர்தல் முடிவை நிறுத்த கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் மான்ஹேட்டனில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேவினா சிங் என்ற 24 வயது பெண், காவல் அதிகாரியை தரக்குறைவாக பேசியதுடன், அவரின் முகத்தில் காரித் துப்பினார்.
இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த பெண் ஏதோ காவலரை பேசியது அந்த வீடியோவில் பதிவானாலும், அவர் என்ன பேசினார் என்ற கதவல் தெரியவில்லை.

அந்த பெண் எச்சிலை துப்பியதும், காவல் அதிகாரிகள் அந்த பெண்ணை தரையில் தள்ளி கைது செய்தனர். மேலும் வைரலான வீடியோவை பார்த்த என்.ஒய்.பி.டி மற்றும் சில சங்கங்கள் அந்த பெண்ணின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Views: - 20

0

0