13 வயது சிறுவனை சுட்டுக்கொன்ற போலீசார் : வீடியோ வெளியானதால் அமெரிக்காவில் மீண்டும் பதற்றம்!!

16 April 2021, 9:20 am
Us 13 years old Shot -Updatenews360
Quick Share

அமெரிக்கா : சிகாகோவில் உள்ள போலீசாரால் 13 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கருப்பினத்தவர்களை சேர்ந்த இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சர்சைக்குள்ளாகி வருகிறது. இந்த நிலையில் போலீசார் 13 வயது சிறுவனை சுட்டுக்கொல்லும் வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டு வாரம் கழித்து சிகாகோ போலீசார் வெளியிட்டுள்ள வீடியோவில், ஒன்பது நிமிடம் ஓடக்கூடிய வீடியோவில் பாடி கேம் வீடியோ ஒரு காரில் இருந்து அடையாளம் தெரியாத காவல் அதிகாரி இறங்கி வருகிறார்.

பின்னர் தோலேடா என்ற 13 வயது சிறுவனை மடக்க கைகளை உயர்த்த சொல்வதையும் பின்னர் அந்த சிறுவனை துப்பாக்கியால் சுடுவதையும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

சுடப்பட்ட சிறவன் சில நொடிகளில் சுருண்டு விழுவதையும் அந்த வீடியோவில் காண முடிகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை டான்ட் என்ற கருப்பின இளைஞரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், போலீசார் அராஜகத்தை விளக்கும் இன்னொரு வீடியோ வெளியாகி கடும் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

Views: - 43

0

0