அறுவை சிகிச்சைக்காக போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி

5 July 2021, 11:03 pm
Quick Share

குடல் பிரச்சினை காரணமாக போப் பிரான்சிஸுக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்ட நிலையில், அவர் தற்போது நலமுடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போப் ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 84) கடந்த சில நாட்களாக குடல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். குறிப்பாக பெருங்குடல் சுருக்கம் காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தார். எனவே இதற்கு சிகிச்சை மேற்கொள்வதற்காக இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கெமெல்லி மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டார். கத்தோலிக்க அமைப்பால் நடத்தப்படும் அந்த மருத்துவமனையில் 10 பேர் கொண்ட மருத்துவ வல்லுநர்கள் போப் ஆண்டவர் பிரான்சிசுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இந்நிலையில், அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் நலமுடன் இருப்பதாகவும் திட்டமிட்டபடி அறுவை சிகிச்சை எவ்வித சிக்கலும் இன்றி முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 151

0

0