இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு…!!

10 July 2021, 3:10 pm
Quick Share

ஜகர்தா: இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவானது.

அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளதாவது, இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி தீவில் உள்ள மனாடோ நகரில் 68 கி.மீ ., ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

EarthQuake_UpdateNews360

நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். சில பகுதிகளில் வீடுகள் சேதமடைந்தன, மேலும் சில பகுதிகளில் சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டன.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட முழுமையான சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது. சுலவேசியில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 192

0

0