அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தால் நாட்டை விட்டு வெளியேறுவேன்: டொனால்ட் டிரம்ப்

19 October 2020, 1:31 pm
us-president-trumph-updatenews360
Quick Share

ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்தால் நாட்டைவிட்டு வெளியேறுவேன் என அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வரும் 3ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஜோர்ஜியா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசியபோது ஜனாதிபதி அரசியல் வரலாற்றில் மிக மோசமான வேட்பாளருக்கு எதிராக போட்டியிடுவது எனக்கு அழுத்தம் கொடுக்கிறது. நான் தோற்றால் உங்களால் கற்பனை செய்ய முடியுமா? நான் என்ன செய்யப் போகிறேன்? என கூறியுள்ளார்.

ஒருவேளை ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்தால், வரலாற்றிலேயே மிக மோசமான வேட்பாளரிடம் தோல்வி அடைந்த எனது வாழ்க்கையே வீண் என கருதி நாட்டை விட்டு வெளியேறுவேன் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Views: - 21

0

0