26-ந்தேதி காதலரை கரம் பிடிக்கும் ஜப்பான் இளவரசி:அமெரிக்காவில் குடியேற வாய்ப்பு

Author: kavin kumar
2 October 2021, 10:23 pm
Quick Share

காதலுக்காக அரச பட்டத்தை துறந்த ஜப்பான் இளவரசி காதலரை வருகிற 26-ந்தேதி திருமணம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் மன்னர் நருகிடோவின் இளைய சகோதரர் புமிகிடோவின் மகளும், அந்த நாட்டின் இளவரசியுமான மகோ, கடந்த 2012-ம் ஆண்டு கல்லூரியில் படித்த போது தன்னுடன் படித்த கீ கோமுரோ என்னும் சாதாரண குடும்பத்தை சேர்ந்த இளைஞருடன் நட்பாக பழக ஆரம்பிக்க, பின்னர் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. அதை தொடர்ந்து, 2017-ம் ஆண்டு இருவரும் தங்களது திருமண அறிவிப்பை வெளியிட்டனர்.பல நூற்றாண்டுகளாகத் தொடரும் அரசு வழக்கப்படி, இளவரசி சாதாரண குடும்பத்தை சேர்ந்த நபரை திருமணம் செய்து கொண்டால் அவர் தனது அரச பட்டத்தை துறக்க வேண்டும். காதலனை கைப்பற்றுவதற்காக தனது அரச பட்டத்தைத் துறந்ததுடன், அரசு நிதியுதவியும் வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார் இளவரசி.

இது, மக்கள் வரிப்பணத்தில் இருந்து வழங்கப்படுவதால் தனக்கு கொடுக்கப்படும் சுமார் 1.35 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை நிராகரித்துள்ளார் மகோ.இந்த நிலையில் மகோ-கீ கோமுரோவின் திருமணம் வருகிற 26-ந்தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணத்துக்குப் பிறகு இந்த ஜோடி அமெரிக்காவில் குடியேறவிருக்கிறது. அங்கு கொமுரு வழக்குரைஞராக பணியாற்றி வருகிறார். இந்த இளம் காதலர்கள் மீது அபரிமித ஊடக வெளிச்சம் பட்டதால், இளவரசி மகோ மன அழுத்தத்துக்கு ஆளானார் என்று ஜப்பானின் அரச குடும்ப விவகார முகமை கூறியுள்ளது.

Views: - 500

0

0