‘நாங்க கும்பலாக சுத்துவோம்’: லட்சக்கணக்கான செந்நிற நண்டுகளின் ஊர்வலம்…வியக்க வைக்கும் வீடியோ..!!

Author: Aarthi Sivakumar
24 November 2021, 1:52 pm
Quick Share

சிட்னி: ஆஸ்திரேலியாவில் லட்சக்கணக்கான செந்நிற நண்டுகள் சாலைகளை கடந்து கடற்கரையை நோக்கி பயணித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவிலிருந்து கடற்கரைக்கு லட்சக்கணக்கான சிவப்பு நண்டுகள் இடம்பெயர்ந்தன. ஒவ்வொரு ஆண்டும் இனப்பெருக்கத்திற்காக இவ்வாறு நண்டுகள் இடப்பெயர்ச்சி செய்வது வழக்கம்.

இந்த ஆண்டும் லட்சக்கணக்கான செந்நிற நண்டுகள் கூட்டம் கூட்டமாக சாலைகளை கடந்து கடற்கரையை நோக்கி பயணித்தன. பாலங்களின் மீது ஏறி சாலைகளை கடந்து இடம்பெயர்ந்து செல்கிறது.

சில இடங்களில் லட்சக்கணக்கான நண்டுகள் சாலையில் இடம்பெயர்ந்து சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான செந்திற நண்டுகளின் இந்தப் பயணம் காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.

நண்டுகளின் இந்த இடம்பெயரும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Views: - 204

0

0