“ஒத்துழைத்து செயல்படுவோம்”..! நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜோ பிடெனுக்கு வாழ்த்துத் தெரிவித்த ரஷ்ய அதிபர்..!

15 December 2020, 3:14 pm
vladimir_putin_russia_updatenews360
Quick Share

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று, ஜோ பிடென் நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வென்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் உலக பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இரு நாடுகளும் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து செயல்பட முடியும் என்று நம்புவதாகக் கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடென் அதிபராக மேற்கொள்ளும் அனைத்து நடவடிகக்கைகளும் வெற்றியடைய விரும்புவதாகத் தெரிவித்த புடின், “எனது பங்கிற்கு, உங்களுடன் ஒத்துழைத்து செயல்பட நான் தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.

முன்னதாக நேற்று அமெரிக்க தேர்தல் கல்லூரியால் அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இறுதியாக வாழ்த்துத் தெரிவித்த முக்கிய உலக நாடுகளின் தலைவர்களில் ரஷ்ய ஜனாதிபதியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் தேர்தல் தலைவர் மற்றும் வெளியுறவு மந்திரி உட்பட மாஸ்கோவில் உள்ள அதிகாரிகள் முன்னர் அமெரிக்க தேர்தல் செயல்முறையை விமர்சித்திருந்தனர். இது பழமையானது என்றும் மக்களின் விருப்பத்தின் படியானது அல்ல என்றும் அவர்கள் விவரித்தனர்.

ஆனால் தற்போது ஜோ பிடென் வெற்றி அதிகாரப்பூர்வமாக உறுதிசெய்யப்பட்டு விட்டதால், ஜோ பிடெனுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளது. புடின் தனது வாழ்த்துச் செய்தியில், தங்கள் இரு நாடுகளும் உலகளாவிய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு சிறப்புப் பொறுப்பைக் கொண்டுள்ளன என்று கூறினார்.

ரஷ்யாவும் அமெரிக்காவும் வேறுபாடுகள் இருந்தபோதிலும், உலகம் தற்போது எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளையும் சவால்களையும் தீர்க்க உண்மையிலேயே பங்களிக்க முடியும் என்று நம்புவதாக புடின் மேலும் கூறினார்.

இதற்கிடையே தற்போது பதவியிலிருந்து வெளியேறும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை விட, ஜோ பிடென் ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 0

0

0