நீதிமன்ற வளாகத்தில் சுற்றி வளைத்த ரேஞ்சர்கள்… பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் அதிரடி கைது…!!!!
Author: Udayachandran RadhaKrishnan9 மே 2023, 3:59 மணி
இம்ரான்கான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நிலையில் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினர் கைது செய்தனர். நீதிமன்றம் வெளியே கைது செய்யப்பட்ட இம்ரான்கானை விசாரணைக்காக அழைத்து சென்றது போலீஸ்.
இம்ரான்கானை போலீசார் கைது செய்ய முயன்றபோது தடுக்க முயன்ற அவரது வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராணுவம், உளவு அமைப்புகள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இம்ரான்கான் கைதானார். இம்ரான்கான் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டதை அறிந்த அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இம்ரான் கான் கைது pic.twitter.com/6he6ySXHCP
— E Chidambaram. (@JaiRam92739628) May 9, 2023
இதனால் பாகிஸ்தானில் பதற்றமான நிலை உருவாகி உள்ளது.
Views: - 640
0
0