பிப்ரவரி 14 ஏன் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது…? ஒருவரின் இறப்பைதான் நாம் அன்பு பகிரும் நாளாக கொண்டாடுகிறோமா…? யார் அந்த மனிதர்…?

14 February 2020, 10:43 am
Quick Share

அன்பினால் பகிரும் பூக்கள், இதழ்கள் நிரம்பும் முத்தங்கள், இடைவெளியற்ற இரு உடல்கள், சண்டைகளை முடித்த சமாதானம், ஜாதி, மதம், மொழி, உடல், உயரம், நிறம், ஊனம், நேரம், வயது, தொலைவு என அனைத்தையும் கடந்து ஒரு கண் சிமிட்டலிலும் உதட்டோர புன்னகையிலும் இந்த உலகை அமைதியுடன் அனுமதித்து ஆள்வது…, காதல். பிரிவுகள், புணர்வுகள், பரிவுகள், புரிந்துக்கொள்ளுதல், பகிர்தல், விட்டுக்கொடுத்தல், போன்ற பல பாடங்களை கற்றுத் தரும் இந்த காதலை கொண்டாட நமது முன்னாள் விதித்த நாள் பிப்ரவரி 14. ஆனால் ஒருவரின் இறப்பைதான் நாம் காதலர் தினமாக கொண்டாடுகிறோமென்று எத்தனைப்பேருக்கு தெரியும்…?


பிப்ரவரி 14 ஏன் காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது…? ஆங்கிலத்தில் இதற்கு பெயர் வாலெண்டைன்ஸ் டே. கி.பி.200-300 ஆம் ஆண்டுகளில் ரோம் நாட்டில் வாழ்ந்து வந்த புனிதரின் பெயர் வாலெண்டைன்ஸ். அப்போது ரோம் நாட்டை ஆண்ட கிளாடியஸ் ரோம் நாட்டிற்காக பணிப்புரியும் ராணுவ வீரர்கள் ரோம் நாட்டிற்கு மட்டுமே சொந்தம் என்ற எண்ணத்துடன் வேறு நாட்டு மகளிரை அவர் திருமணம் செய்யக்கூடாதென்று ஒரு விதியை முன்னிறுத்தினார். ஆனால் அப்போது புனிதராக பணிப்புரிந்த வாலெண்டைன்ஸ் கிளாடியஸின் வார்த்தைகளை மீறி அங்கு ரோம ராணுவ வீரர்கள் வேறு நாட்டு பெண்களை திருமணம் செய்ய இவர் உதவினார். இந்த விஷயம் கிளாடியஸிற்கு தெரியவர வாலெண்டைன்ஸை சிறையில் அழைத்தார்.


அப்போது அவர் சிறையில் இருந்தபோது சிறைப் பாதுகாவலரின் கண் பார்வையற்ற மகள் வாலெண்டைன்ஸிற்கு உணவளித்து வந்தார். அப்போது அந்தப்பெண்ணின் மேல் காதல் வயப்பட்டார். கி.பி.270 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதியன்று அந்த லென்னிற்கு கண்பார்வை மீண்டும் வந்தது. அப்போது வாலெண்டைன்ஸின் கையில் “From your வாலெண்டைன்” என்று எழுதப்பட்ட காதல் கடித்துடன் உயிர் பிரிந்த நிலையில் இருந்தார். அவருடைய இறந்த நாளைத்தான் நாம் அனைவரும் காதலர் தினமாக கொண்டாடிவருகிறோம்.