வாழ்வாதாரம் தேடி கடல் கடந்து பயணம்: இங்கிலீஸ் கால்வாயில் கவிழ்ந்த அகதிகள் படகு…31 பேர் பரிதாப பலி..!!

Author: Aarthi Sivakumar
25 November 2021, 1:37 pm
Quick Share

பிரான்ஸ்: இங்கிலீஷ் கால்வாயில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 31 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.

இந்த பயணத்தின் போது விபத்து ஏற்பட்டு அடிக்கடி உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதற்கிடையில், அட்லாண்டிக் பெருங்கடலில் பிரான்ஸ் – இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே உள்ள இங்கிலிஷ் கணவாய் வழியாக பெண்கள் உள்பட 34 அகதிகள் நேற்று இரவு ஆபத்தான பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அந்த படகு இங்கிலிஷ் கணவாய் வழியாக சென்றபோது அகதிகள் படகு திடீரென அட்லாண்டிக் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகு கவிழ்ந்ததால் கடலில் தத்தளித்த அகதிகள் 2 பேரை உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால், இந்த கோர விபத்தில் படகில் இருந்த 31 அகதிகள் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதனையடுத்து, விபத்தில் சிக்கி கடலில் மூழ்கியவர்களை தேடும் பணியில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் கடற்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, அந்நாட்டின் உள்துறை அமைச்சர் ஜெரால்டு டார்மானின் தெரிவிக்கையில், அந்த படகில் 34 பேர் பயணம் செய்த நிலையில், இரண்டு பேர் மட்டுமே தற்போது உயிருடன் மீட்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் வழியாக பிரிட்டனுக்குள் நுழையும் அகதிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், இங்கிலீஷ் கால்வாயில், அவர்களை தடுக்க பிரான்ஸ் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என பிரிட்டனும், தங்களுக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என பிரான்ஸூம் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.

Views: - 193

0

0