சுற்றுலா பயணிகளுக்கு குட்நியூஸ்: தனிமைப்படுத்தி கொள்ள தேவையில்லை…கனடா அறிவிப்பு..!!

11 June 2021, 8:55 am
Canada_Airport_UpdateNews360
Quick Share

ஒட்டாவா: கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுற்றுலாப் பயணிகள் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என்று கனடா தெரிவித்துள்ளது.

கனடாவில் கொரோனா தொற்று குறைந்துள்ளதால் அங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இதுகுறித்து கனடா வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு கனடா வருபவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. மற்றவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்ற சான்றிதழைக் கனடாவில் நுழைவதற்கு முன்னர் பெற்றிருக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவில் கொரோனா தடுப்பூசிகளை வேகமாகச் செலுத்துவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

canada pm - updatenews360

இஸ்ரேலுக்கு அடுத்தபடியாக கனடாவில் 61% பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன. மக்கள் மத்தியில் கரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டுசென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தியுள்ளன. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசியைப் பெரும்பாலான அளவில் செலுத்திய இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ், கனாடா போன்ற நாடுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளன.

Views: - 203

0

0