தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்த பேபி ஜம்போ: காப்பாற்ற போராடிய தாய் யானை….வைரலாகும் மீட்பு வீடியோ!!

Author: Aarthi Sivakumar
16 August 2021, 4:28 pm
Quick Share

கென்யா: கென்யாவில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குட்டியானை ஒன்றை மீட்க தாய் யானை போராடும் உணர்ச்சிமிகு காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கென்யாவில் இருக்கும் ஷெல்ட்ரிக் வனவிலங்கு அறக்கட்டளையில் தண்ணீர் இருந்த மிக சிறிய தொட்டியில் தற்செயலாக புதிதாக பிறந்த யானை குட்டி விழுந்து விட்டது. சிறிய தொட்டியை சுற்றி சில யானைகள் நின்று சத்தமிட்டு குட்டியை வெளியே மீட்க போராடுகிறது. இதனை கண்ட ஊழியர்கள் குட்டியை பத்திரமாக மீட்டனர்.

இந்த ருசிகர சம்பவம் அங்கிருக்கும் கேமராவில் பதிவாகியுள்ளது. பின்னர் இந்த மீட்பு காட்சிகளை அந்த வனவிலங்கு அறக்கட்டளை இன்ஸ்டாவில் வீடியோவாக போஸ்ட் செய்துள்ளது. உண்மையில் அந்த யானைக் குட்டி தற்செயலாக தண்ணீர் இருந்த மிக சிறிய தொட்டியில் விழுந்து விட்டது. புதிதாக பிறந்த யானை குட்டி என்பதால் அந்த சிறிய தொட்டியிலிருந்து அதற்கு வெளியேற தெரியவில்லை.

சிறிய தொட்டியை சுற்றி சில யானைகள் நின்று சத்தமிடுவதை தங்கள் காவலர்கள் கண்ட பின்னர் விரைந்து சென்று அங்கெ பார்த்த போது, புதிதாக பிறந்த யானை குட்டி ஒன்று தண்ணீர் இருக்க கூடிய சிறிய தொட்டியில் சிக்கி இருப்பதை பார்த்தனர். அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த எல்லா தொட்டிகளிலும் குட்டிகள் விழுந்து விடாமல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும், அந்த யானை குட்டி எப்படியோ தவறுதலாக உள்ளே விழுந்து விட்டது.

அதை வெளியே இழுக்க அதன் குடும்ப உறுப்பினர்களான பிற யானைகள் மிக சிறப்பான முயற்சியில் ஈடுபட்ட போதும், அவற்றால் அந்த குட்டியை வெளியே கொண்டு வர முடியவில்லை. சிறிது நேரத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழு சம்பவ இடத்திற்கு வந்து நடவடிக்கையில் இறங்கியது.

ஒரு வீடியோவில் அந்த யானை குட்டி, சிறிய தண்ணீர்த் தொட்டியில் இருந்து வெளியேற முடியாமல் போராடுவதும், மற்ற யானைகள் அதை வெளியே இழுக்க முயற்சிப்பதும் பதிவாகி இருக்கிறது.

Views: - 267

0

0