மத்திய அமெரிக்காவில் ஈட்டா புயலின் கோரத்தாண்டவம்: வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்பு பகுதிகள்..!!

8 November 2020, 2:03 pm
etta-flood-updatenews360
Quick Share

மத்திய அமெரிக்க நாடுகளின் பல்வேறு இடங்கள் ஈட்டா புயலால் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

நிகரகுவாவில் கரையை கடந்த ஈட்டா புயலால் ஹோண்டூராஸ், கவுதமாலா, மெக்சிகோ உள்ளிட்ட இடங்களில் மணிக்கு 241 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதுடன் கனமழை கொட்டித் தீர்த்தது.

ஈட்டா புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக அனைத்து சாலைகளும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது. அமெரிக்காவில் வீசிய புயல்களில் மிகவும் சக்தி வாய்ந்த புயலாக ஈட்டா புயல் கருதப்படுகிறது.

etta storm - updatenews360

4 புயல்களின் தன்மையை இந்த புயல் கொண்டுள்ளது என்பதில் இருந்தே இதன் வீரியத்தை உணர முடியும் என கூறப்படுகிறது. இந்நிலையில், கனமழை கொட்டி தீர்த்ததால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதில் ஹோண்டுராசின் வடகிழக்கு பகுதிகளில் இடுப்பு அளவிற்கு வெள்ளம் சூழ்ந்துள்ளதால், பல வீடுகள் நீரில் மூழ்கின.

கவுதமாலாவில் நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மண்ணில் புதைந்து மாயமானவர்களை தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர்கள் மற்றும் படகுகள் உதவியுட்ன் மீட்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

Views: - 19

0

0