ஆப்கானிஸ்தானில் பயங்கரம்: சாலையோர வெடிகுண்டு தாக்குதலில் 2 பேர் பரிதாப பலி!!

10 July 2021, 2:06 pm
Quick Share

காபுல்: ஆப்கானிஸ்தானில் இன்று காலை நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகின்றனர். ஆகஸ்ட் 31ம் தேதியுடன் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுவதும் வெளியேறுவார்கள் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க படைகள் வெளியேறுவதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். ஈரான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுடனான ஆப்கானிஸ்தான் எல்லைகளை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். மேலும், ஆப்கானிஸ்தான் அரசு படையினர் மீதும் தலிபான்கள் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் காந்தகார் மாகாணம் டாமன் மாவட்டத்தில் இன்று காலை குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. சாலையோரம் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் பொதுமக்கள் 2 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் 2 போலீசார் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Views: - 188

0

0