உக்ரைனை முழுமையாக கைப்பற்றியதா ரஷ்யா..? கார்கிவ்வில் இருக்கும் நாடாளுமன்றத்தில் பறக்கவிடப்பட்ட ரஷ்ய கொடி…!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
25 February 2022, 1:55 pm
Quick Share

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்ய படைகள், அந்நாட்டின் நாடாளுமன்றத்தை கைப்பற்றியதுடன், அங்கு ரஷ்ய கொடியை பறக்க விட்ட காட்சிகள் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உக்ரைன் மீது ரஷ்யா படைகள் நேற்று போர் தொடுத்தன. உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, ரஷ்ய படைகள், உக்ரைனை சூறையாடி வருகின்றன. சக்தி வாய்ந்த குண்டுகள் மற்றும் ஆயுதங்களால் உக்ரைன் நாட்டின் ராணுவ தளவாடங்கள் மற்றும் விமான தளங்கள் அழிக்கப்பட்டன. இதற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்தத் தாக்குதலில் இதுவரையில் நூற்றுக்கணக்கான உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ரஷ்யா தரப்பில் 800 வீரர்கள் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதனிடையே, உக்ரைனில் 2வது நாளாக இன்றும் தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது. தலைநகர் கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷ்யா படைகள் ஆக்கிரமித்து விட்டதாகக் கூறப்படுகிறது. டாங்கிகள், போர் விமானங்கள் அனைத்து அந்த நகரங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி சர்வதேச அளவில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், உக்ரைனின் தலைநகர் கிவ்விற்கு அடுத்தபடியாக உள்ள 2வது மிகப்பெரிய நகரமான கார்கிவ்-வை ரஷ்ய படைகள் கைப்பற்றி விட்டன. அங்குள்ள அந்நாட்டின் நாடாளுமன்ற கட்டிடத்தில், உக்ரைன் கொடி அகற்றப்பட்டு, ரஷ்ய கொடியை, அந்நாட்டு ராணுவ வீரர்கள் பறக்கவிட்டுள்ளனர்.

இதன்மூலம், உக்ரைனை ரஷ்யா கிட்டத்தட்ட கைப்பற்றியதாகவே கருதப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 508

0

0