ஆக்ஸ்போர்டு கொரோனா ஊசியை போட்டுக்கொள்பவர்கள் குரங்குகளாகிவிடுவர்: பரபரப்பு பிரச்சாரம் செய்யும் ரஷியா….!!!

16 October 2020, 12:56 pm
covid vacine - updatenews360
Quick Share

லண்டன்: ஆக்ஸ்போர்டு கொரோனா ஊசியை போட்டுக்கொள்பவர்கள் குரங்குகளாகிவிடும் அபாயம் இருப்பதாக ரஷியா வெளியிட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் தயாராகும் ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி சிம்பன்ஸி கொரோனா வைரஸ் பயன்படுத்தப்படுவதால், அதை போட்டுக்கொள்பவர்கள் குரங்குகளாக மாறிவிடுவார்கள் என ரஷ்யா பீதியை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்து வருகிறது.

இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் எந்த தடுப்பூசியும் ஆபத்தானதுதான் என்ற கருத்து படங்கள் மூலமும், வீடியோக்கள் மூலமும் சமூக ஊடகங்களில் தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

மேலும், இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சில ரஷியாவின் பிரபலமான தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் குரங்காகிவிட்டது போன்ற புகைப்படமும், ஒரு குரங்கு, தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் ஆய்வக உடையில் இருப்பது போன்ற புகைப்படம் முதலான புகைப்படங்களை ரஷியா வெளியிட்டுள்ளது.